நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரணியம் தாலுகா பகுதியில் உள்ள அகஸ்தியன்பள்ளி, கோடியக்கரை, கோவில் தாவு, கடினல் வயல் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 6500 ஏக்கரில் ரசாயன உப்பும், 3500 ஏக்கரில் சாப்பாடு உப்பும் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது. தற்போது அவ்வப்போது பெய்து வரும் கனமழையின் காரணமாக சேமிக்கப்பட்ட உப்புகளை தார்ப்பாய் மற்றும் பண மட்டைகளைக் கொண்டு பாதுகாக்கும் பணியில் தீவிரமாக உப்பளத் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.