நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரணியம் தாலுக்கா பெரிய குத்தகையில் உள்ள ஒரு வீட்டில் இலங்கையைச் சேர்ந்தவர் தங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனையில் ஈடுபட்ட போலீசார் அங்கு பாஸ்போர்ட் இன்றி சட்டவிரோதமாக தங்கி இருந்த இலங்கையைச் சேர்ந்த கீர்த்தன் என்பவரையும் அவருக்கு அடைக்கலம் கொடுத்த கஞ்சா கடத்தலில் தொடர்புடைய முனீஸ்வரன் ஆகிய இருவரையும் கடலோர காவல் குழும இன்ஸ்பெக்டர் ஜோதி முத்துராமலிங்கம் தலைமையிலான காவல்துறையினர் கைது செய்தனர்.