மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா கொள்ளிடம் கை கால் பகுதியில் கோரைப்பாய் குடோனில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர்.
இந்த விபத்தில் குடோனில் வைக்கப்பட்டிருந்த சுமார் 50, 000 மதிப்பிலான பாய் தயாரிப்பதற்காக இறந்த கோரைகள் இணைந்து சேதம் அடைந்தது.
இது குறித்து கொள்ளிடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.