

மயிலாடுதுறை: ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தினர் ஒரு மணி நேரம் பணிகளைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவை கண்டித்து இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சீர்காழி வட்டத் தலைவர் தன்ராஜ் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பெரம்பலூர் ஆட்சியை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.