மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது.
இந்த பள்ளியில் மாணவர்களுக்கு கட்டப்பட்ட வரும் புதிய கழிவறை கட்டிடத்தை மயிலாடுதுறை மாவட்ட வருவாய் அலுவலர் உமா மகேஸ்வரி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது புதிதாக கட்டப்பட்டு வரும் கழிவறை கட்டிடம் தரமாகவும் மற்றும் உறுதியாகவும் இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார். இந்த நிகழ்வில் அரசுத்துறை அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.