மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா ஆக்கூர் ஊராட்சிக்கு உட்பட்ட தளச்சங்காடு கிராமத்தில் பைபாஸ் சாலை அமைக்கப்பட்டு வெகு நாட்கள் ஆகிறது.
இருப்பினும் அந்த பகுதியில் இன்னும் பேருந்து நிழற்குடை அமைக்கவில்லை. இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் வெயிலில் காத்திருந்து பேருந்தில் பயணம் செய்யும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே மாவட்ட நிர்வாகம் விரைந்து அங்கு மக்களுக்கான பேருந்து நிழற்குடை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.