மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா அசிக்காடு ஊராட்சி முதல் தேரெழுந்தூர் ஊராட்சி வரை சுமார் 2 கிலோ மீட்டர் வடிகால் வாய்க்கால் அமைந்துள்ளது.
இந்த வாய்க்காலில் நாணல் மற்றும் செடி கொடிகள் சூழப்பட்டு காணப்படுகிறது. எனவே குருவை சாகுபடி அறுவடை பணிகள் துவங்கும் முன்னர் வாய்க்கால்களை தூர்வாரிட வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.