மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பகல் நேரங்களில் கடுமையான வெயில் வாட்டி வதைக்கிறது. இதனால் பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியில் செல்வதற்கு அச்சமடைந்து வருகின்றனர்.
இந்நிலையில் சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில், கொள்ளிடம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் பனிமூட்டம் நிலவியது. சீர்காழியை சுற்றியுள்ள கிராமங்களில் காலை வரை பனிமூட்டம் நிலவி வருவதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே வாகனங்களை ஓட்டி செல்கின்றனர்.