சீர்காழி: இணைப்பு சாலையை சரி செய்ய கோரிக்கை

78பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகரில் அமைந்துள்ள சட்டை நாதர் கோவில் தெற்கு வீதி, வடக்கு வீதி ஆகிய சாலைகளில் பள்ளங்கள் ஏற்பட்டு குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். திருமுல்லைவாயில் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து சீர்காழிக்கு படிக்க வரும் பள்ளி மாணவ மாணவிகள் வாகன ஓட்டிகள் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். எனவே இந்த சாலையை விரைந்து சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி