திமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டம்

58பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பழைய பேருந்து நிலையத்தில் திமுக இளைஞரணி சார்பில் இந்தி திணிப்பு, நிதி பகிர்வில் பாரபட்சம் மற்றும் தொகுதி மறு சீரமைப்பில் அநீதி இழைக்கும் ஒன்றிய அரசை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்த பொதுக்கூட்டத்திற்கு மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா முருகன் தலைமை தாங்கினார்.

மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மருது வரவேற்புரையாற்றினார். மேலும் இந்த நிகழ்வில் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

டேக்ஸ் :