திருப்பரங்குன்றம் - Thiruparankundram

திருப்பரங்குன்றம்: வெள்ளி வாகனங்களாக மாற்ற முடிவு

திருப்பரங்குன்றம்: வெள்ளி வாகனங்களாக மாற்ற முடிவு

மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலிலின் திருவிழா காலங்களில் தங்கமயில், தங்கக் குதிரை, தங்கப் பல்லக்கு, தங்க சிம்மாசனம், தங்கச் சப்பரம் , வெள்ளி யானை, வெள்ளி ரிஷபம், வெள்ளி ஆட்டுக் கிடாய், வெள்ளி பூதம், மரத்தினாலான அன்னம், சேஷம், பச்சைக்குதிரை, காமதேனு வாகனங்களில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சியில் இடம்பெறுவது வழக்கம். தற்போதுள்ள மரத்தினாலான வாகனங்களை வெள்ளி வாகனங்களாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஆலாசனைக் கூட்டம் ஏற்கனவே நடந்த நிலையில் துறை அனுமதி பெற்று விரைவில் பணி துவங்க உள்ளது. கோவிலின் கும்பாபிஷேக பணிகள் துவங்கும் முன் இப்பணிகள் நிறைவடையும் என்று அறங்காவலர் குழு தலைவர் சத்யபிரியா தெரிவித்தார்.

வீடியோஸ்


జగిత్యాల జిల్లా