புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டையில் வணிக வளாக பெண்கள் கழிவறையில் ரகசிய கேமரா வைத்து வீடியோ எடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கந்தர்வகோட்டை போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ள மிதுன் என்பவர் அப்பகுதியில் முடி திருத்தும் கடை நடத்தி வருகிறார். வணிக வளாகத்திலுள்ல ஆண்கள் கழிவறை தூய்மையாக இல்லை என அடிக்கடி பெண்கள் கழிவறையை இவர் பயன்படுத்தி வந்ததுள்ளது போலீஸார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.