ஒருமாதத்தில் மதுரை விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக மாறுகிறது என நேற்று (அக். 4) விமான நிலைய இயக்குநர் தெரிவித்துள்ளார். பயணிகளுக்கு நவீன கார் பார்க்கிங், மருத்துவ அறைகள் உள்ளன. சிறு கடைகள் அமைக்கப்பட உள்ளன.
ஒரு வாரத்திற்குள் மின்சார வாகனங்களுக்கு 2 சார்ஜிங் பாயின்ட்கள் அமைக்கப்படும். மேம்பட்ட சரக்கு ஏற்றுமதி இறக்குமதி வசதிகள் பழைய டெர்மினலில் அமைக்கப்படவுள்ளது. விமான நிலையத்திற்கென தனி போலீஸ் ஸ்டேஷன் ஏற்படுத்தப்படும். 24 மணி நேர சேவை மதுரைக்கு பல தொழில் சேவைகளில் மேம்படுத்தவும் சுற்றுலாவை ஊக்கு விக்கவும் உதவும் என்றார்.