கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

77பார்த்தது
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 2 ஆண்டுகளாக தொடரும் நிதி நெருக்கடியால் இரண்டு மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை என்பதால் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆசிரியர்கள், ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக நிதி நெருக்கடியினால் பேராசிரியர்கள், அலுவலர்களுக்கு முறையாக சம்பளம் வழங்கப்படவில்லை. ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், அலுவலர்களுக்கும் சம்பளம் வழங்குவதில் இதே நிலை. இந்நிலையில் சில மாதங்களாகவே நிதி நெருக்கடி காரணமாக பல்வேறு சிக்கல்களை மதுரை காமராஜர் பல்கலைகழகம் சந்தித்து வருகிறது.

இந்த நிலையில் இன்று(செப்.5) ஆசிரியர் தினத்தை முன்னிட்டு இரண்டு மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை எனக் கூறி கருப்பு பேஜ் அணிந்து காமராஜர் பல்கலைக்கழக ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் இன்று மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை போராட்டம் நடத்த உள்ளனர்.

தொடர்புடைய செய்தி