மதுரை திருப்பரங்குன்றத்தில் பல்வேறு கோவில்களில் நவராத்திரியை முன்னிட்டு சிறப்பு கொலு அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன. அதனடிப்படையில் திருப்பரங்குன்றத்தில் புகழ் பெற்ற அருள்மிகு ஆவுடைய நாயகி சமேத சத்தியகிரீஸ்வரர் திருக்கோவிலில் நவராத்திரி தொடங்கி நடைபெற்று வருகிறது.
மூன்றாம் நாளான இன்று (அக். 5) மாலை அன்னை கோவர்த்தனாம்பிகை ஊஞ்சல் உற்சவ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்நிகழ்வில் பூஜைகள் ஆராதனைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். வந்திருந்த பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.