மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இப்பகுதியில் இரவு நேரங்களிலேயே மழை பெய்து வந்தது. இந்நிலையில் அழகர்மலையில் பெய்யும் மழை நீர் ஒவ்வொரு கண்மாயாக நிரப்பி, மறுகால் பாய்ந்து அடுத்த கண்மாய்க்கு செல்வது வழக்கம். நேற்று (அக். 15) நள்ளிரவில் சென்னகரம்பட்டியில் உள்ள காஞ்சரங்குளத்தில் தண்ணீர் நிரம்பி கண்மாக் கரை உடைந்து, அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் பாய்ந்து நெற்பயிர்களை சேதப்படுத்தியது. இதனால் விவசாயிகள் பெரும் வேதனையில் உள்ளனர்.