மேலூர்: கனமழையால் வேருடன் சாய்ந்த மரம்

51பார்த்தது
மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் கடந்த மூன்று தினங்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. பகலை விட இரவில் அதிக அளவு பெய்து மழை பெய்கிறது. இந்நிலையில் நேற்று (அக். 14) இரவு பெய்த கனமழையால் மேலூர் அருகே கீழ பதினெட்டாங்குடியில் அமைந்துள்ள மலை கோயிலில் உள்ள பழமையான ஆலமரம் வேருடன் சாய்ந்தது. இதனால் கோவிலின் சுற்று சுவர் சேதமடைந்துள்ளது. பழமையான கோயில் மரம் சாய்ந்ததில் அப்பகுதி மக்கள் மிகவும் வருத்தத்தில் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி