மேலூர்: நகராட்சி ஆணையாளரிடம் மனு அளித்த வியாபாரிகள்
மதுரை மாவட்டம் மேலூர் நகராட்சி ஆணையாளரிடம் தினசரி மார்க்கெட் காய்கறி வியாபாரிகள் சங்கத்தின் சார்பாக தினசரி மார்க்கெட் முன்பகுதியில் உள்ள காய்கறி கடைகளை ஒருங்கிணைப்பு செய்து காய்கறி மார்க்கெட் முழுமையாக செயல்படுத்த கோரி இன்று (நவ. 21) மனு அளிக்கப்பட்டது. இதில் மார்க்கெட் சங்க தலைவர் எஸ்.பி. மணவாளன், துணைச் செயலாளர் பூச்செண்டு, துணைத் தலைவர் சுலைமான், பொருளாளர் இளங்கோவன் மற்றும் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.