மேலூர்: வெள்ள நீரில் ஆபத்தை உணராமல் விளையாடும் சிறுவர்கள்.

77பார்த்தது
மதுரை மாநகர் மற்றும் மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதில் அழகர் கோவில் மலைத்தொடரில் பெய்யும் மழை நீர், ஓடைகள் வழியாக உருண்டோடி பல கண்மாய்களில் மறுகால் பாய்ந்தது. இவ்வாறு மலையில் இருந்து அடித்து வரும் காட்டாற்று வெள்ளம், கிடாரிப்பட்டி அருகே சாலையை கடந்து சென்றது. அதில் ஆபத்தை உணராமல் அப்பகுதி சிறுவர்கள் விளையாடினர். பெற்றோர் எச்சரிக்கையாக குழந்தைகளை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி