மேலூர் பகுதியில் 5000 ஏக்கர் பரப்பளவில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க வேதாந்தா நிறுவனத்தை அனுமதிக்க கூடாது.
இதனால் தமிழகத்தின் முதல் பல்லுயிர் தலமான அரிட்டாபட்டி உள்ளிட்ட கிராம மக்கள் அகதிகளாகும் சூழல் உள்ளதால் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க தமிழக அரசு தடை செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் தலைமையில் கிராம மக்கள் மனு அளித்தனர்