மதுரை மாவட்டம் மேலூர் சந்தைப்பேட்டையில் உள்ள இடத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமையில் கால்நடை சந்தை நடைபெறுவது வழக்கம். நேற்று ஞாயிற்றுக்கிழமையில் மாடுகள் ஆடுகள் மற்றும் கோழிகளை இரவே கொண்டு வந்துவிந்துவிட்டனனர். இன்று (அக். 28) அதிகாலை முதலே விற்பனை களை கட்டியது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று ஆடுகளின் விற்பனை ரூ. 2 கோடிக்கு மேல் ஆனது. மேலூர் சுற்றியுள்ள பல்வேறு மாவட்டத்திலிருந்து வியாபாரிகள் வந்து ஆடுகளை கொள்முதல் செய்தனர். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.