மதுரை மாவட்டம் மேலூர் அருகே சூரப்பட்டியில் புதிய தார் சாலை போடப்பட்டுள்ளது. இது தரமற்ற முறையில் பெயரளவுக்கு, தாரை ஊற்றி அதில் ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டது. கைகளால் இதை பெயர்த்து எடுக்கும் அளவிற்கு இந்த தார் சாலை மோசமாக உள்ளது. இதில் வாகனங்கள் சென்றால் பத்து நாளைக்கு கூட இந்த சாலை தாங்காது. உரிய அதிகாரிகள் ஆய்வு செய்து இந்த இடத்தில் மீண்டும் தரமான தார் சாலை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.