மேலூர்: சாலை துண்டிப்பால் மக்கள் அவதி
மதுரை மாவட்டம் மேலூர் அருகே அய்யாபட்டி ஊராட்சி திருச்சினை கிராமத்தில் கண்மாயிலிருந்து தண்ணீர் வெளியேறுவதற்கு சாலை துண்டிக்கப்பட்டுள்ளது, கடந்த நான்கு நாட்களாக போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது, ஓட்டக்கோவில்பட்டி உடப்பன்பட்டி, ஒத்தக்கடை, செக்கடிபட்டி பள்ளிக் குழந்தைகள் பள்ளி செல்வதற்கும் அரசு சுகாதார நிலையத்திற்கு செல்வதற்கும், அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு செல்லவும் மிகவும் சிரமப்படுகின்றனர், குறிப்பாக இரவு நேரங்களில் புதிதாக வருவோர்கள் பள்ளத்தை கவனிக்காமல் விழுந்து மரணம் ஏற்படுவதற்கும் வாய்ப்புள்ளது, எனவே விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.