மதுரை: மாணவி புகைப்படத்தை ஆபாசமாக பதிவிட்டவர்கள் கைது
மதுரை மாவட்டம் மேலுார் பகுதியை சேர்ந்த கல்லுாரி மாணவிக்கு, இன்ஸ்டாகிராமில், அவரது ஆபாச படம் 'அப்டேட்' செய்யப்பட்டிருந்தது. மாணவியை தொடர்பு கொண்ட ஒருவர், அப்படத்தை அழிக்க ரூ.10,000 ரூபாய் வேண்டும் என மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி, பெற்றோரிடம் தெரிவித்தார். மாவட்ட எஸ். பி. , அரவிந்திடம் புகார் செய்யப்பட்டது. சைபர் கிரைம்' போலீசாரின் விசாரணையில், மாணவி படத்தை இன்ஸ்டாகிராமில் எடுத்து, அதை ஆபாசமாக 'மார்பிங்' செய்து பணம் கேட்டது கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் எம். ஜி. ஆர். , நகரைச் சேர்ந்த பாலமுரளி, (19), மற்றும் பிளஸ் 2 படிக்கும் 16 வயது சிறுவன் என்றும் தெரிந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர். பாலமுரளியை மதுரை சிறையிலும், சிறுவனை கூர்நோக்கு இல்லத்திலும் போலீசார் அடைத்தனர்.