மதுரை மாவட்டம் மேலூர் அருகே கொட்டாம்பட்டி வட்ட சட்ட பணிகள் குழுவின் சார்பாக கொட்டாம்பட்டி மு க அழகிரி மண்டபத்தில் நேற்று (அக். 25) சார்பு நீதிமன்ற நீதிபதியும், வட்ட சட்ட பணிகள் குழுவின் தலைவர் சாமுண்டீஸ்வரி பிரபா அவர்கள் தலைமயில் நடந்தது. கூட்டத்தில் பெண்கள் சம்பந்தபட்ட பாதுகாப்பு, சொத்தில் பெண்களுக்கு சமபங்கு, 0 crime, போக்ஸோ act பற்றிய விழிப்புணர்வு பற்றி பேசினார்கள்.
கூட்டத்தில், வட்டாட்சியர் செந்தாமரை, கொட்டாம்பட்டி காவல் சார்பு ஆய்வாளர் கவிதா, வருவாய் துறை அதிகாரிகள், வழக்கறிஞர்கள் ராஜராஜன், பூமிநாதன், ஜோதிமணி, பார்த்திபன், துரைபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பஞ்சாயத்து தலைவர் பாலசுப்பிரமணி ஏற்பாடு செய்திருந்தார்.