முன்கூட்டியே தொடங்கும் மாநாடு.. தொண்டர்கள் உற்சாகம்

77பார்த்தது
விழுப்புரம் விக்கிரவாண்டியில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு இன்று (அக்.27) நடைபெறுகிறது. இந்நிலையில், மாநாட்டை முன்கூட்டியே தொடங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாலை 4 மணிக்கு மாநாடு தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், 3 மணிக்கு மாநாடு தொடங்க உள்ளதாக தவெக தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. காலை முதல் தொண்டர்கள் காத்திருக்கும் நிலையில் முன்கூட்டியே தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

நன்றி: Kumudam News

தொடர்புடைய செய்தி