சினிமா சூட்டிங் ;ஊதியம் தராமல் ஏமாற்றிய மதுரை ஏஜென்ட்

61பார்த்தது
மதுரை ரயில் நிலையத்தில் இரவு நேரங்களில் தூங்கக்கூடிய தொழிலாளர்களை சில முகவர்கள் பல்வேறு சினிமா சூட்டிங்கிற்கு துணை நடிகர்களாக நடிப்பதற்காக அழைத்து செல்கின்றனர்.

இந்நிலையில் மதுரை மேலூர் மில்கேட் பகுதியைச் சேர்ந்த பாண்டிச்செல்வி மற்றும் பாண்டி ஆகிய இருவரும் மதுரை ரயில் நிலையம் முன்பாக சாலையோரங்களில் படுத்துஉறங்கி தங்கியிருந்த பெண்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை ராமேஸ்வரம் அருகே உள்ள மண்டபம் பகுதிக்கு நடிகர் ஆர்யா நடித்துள்ள திரைப்படம் ஒன்றில் துணை நடிகர்களாக நடிப்பதற்கு அழைத்து சென்றுள்ளனர்.

கடந்த 20 நாட்களாக அவர்களை அங்கே தங்க வைத்து இரவு நேரத்தில் மட்டும் உணவு வழங்கி நடிக்க வைத்துள்ளனர்.
இந்த நிலையில் சூட்டிங் முடிந்த பின்பு நேற்று மதுரைக்கு அழைத்து வந்து ஏஜெண்டான பாண்டிசெல்வி மதுரை ரயில் நிலையத்தில் இறக்கிவிட்டு வெறும் 300 ரூபாய் மட்டும் கொடுத்துவிட்டு சென்று விட்டதாகவும், இதனால் தாங்கள் பசியோடு ரயில் நிலையத்திலேயே படுத்து கிடப்பதாகவும் ஒவ்வொரு நபர்களிடமிருந்து தலா 5ஆயிரம் ரூபாய் வரைக்கும் ஏமாற்றி சென்று விட்டதாகவும் கூறி ரயில் நிலையத்தில் ஏமாற்றத்துடன் காத்து கிடக்கின்றனர்.

பாண்டிச்செல்வியிடம் கேட்டால் பணமெல்லாம் தர முடியாது நீங்கள் யாரிடம் வேண்டுமானாலும் புகார் சொல்லுங்கள் என எனக்கு அரசியல் சப்போர்ட் இருக்கிறது என கூறி பதில் அளிப்பதாக தெரிவித்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி