பள்ளி விடுமுறை எதிரொலி - ஆதார் மையத்தில் குவிந்த மக்கள்

69பார்த்தது
அனைத்து அரசு துறைகளில் பெறப்படும் ஆவணங்களில் ஒன்றான ஆதார் கார்டுகளில் கட்டணமின்றி அப்டேட் செய்வதற்கான காலக்கெடுவை டிசம்பர் -14ஆம் தேதி வரை நீட்டித்து ஆதார் ஆணையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் தேர்வு விடுமுறை காலம் என்பதால் ஆதார் கார்டுகள் கட்டணமின்றி அப்டேட் செய்வதற்கும் , குழந்தைகளுக்கான ஆதார் கார்டுகளை எடுப்பதற்கும் ஏராளமான பொதுமக்கள் அரசு இ சேவை மையங்களுக்கு செல்லும்போது இ சேவை மையங்களில் ஆதார் எடுப்பதற்கான இணையதளம் மந்தமாக இருப்பதன் காரணமாகவும், மதுரை மாவட்டத்தில் குழந்தைகளுக்கான ஆதார் எடுப்பதற்கு குறைந்த எண்ணிக்கையிலான இ சேவை மட்டுமே உள்ள நிலையில் மதுரை கேகே நகர் பகுதியில் உள்ள ஆதார் ஆணையத்தின் கீழ் செயல்படும் நேரடி ஆதார் மையத்திற்கு நேற்று ஏராளமான பொதுமக்கள் காலை முதல் வருகை தர தொடங்கிய நிலையில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வருகை தந்ததால் சாலை முழுவதிலும் வெயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

மேலும் சிறுவர்கள் , கர்ப்பிணி பெண்கள் குழந்தைகளுடன் வந்த தாய்மார்கள் முதியவர்கள் என அனைவரும் வெயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

மதுரை மாவட்ட அரசு அலுவலகங்களில் உள்ள இ- சேவை மையங்களில் குழந்தைகளுக்கான ஆதார் மையங்களை அதிகப்படுத்த வேண்டுமெனவும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி