தமிழகத்தில் பாலாறும், தேனாறுமா ஓடப்போகிறது - ராஜன் செல்லப்பா

60பார்த்தது
மதுரை ஒத்தக்கடை அருகே திருமோகூரில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளரும், திருப்பரங்குன்றம் எம் எல் ஏ-வும் மான ராஜன் செல்லப்பா தலைமையில் மதுரை கிழக்கு வடக்கு, தெற்கு ஒன்றிய கழக வளர்ச்சிப் பணிகள் செயல் வீரர்கள், வீராங்கனைகள் ஆகியோருக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதை தொடர்ந்து, கட்சி நிர்வாகிகளுடன் எம் எல் ஏ ராஜன் செல்லப்பா பேசுகையில்.

துணை முதலமைச்சராக உதயநிதி பொறுப்பேற்ற பிறகு தமிழகத்தில் பாலாறும், தேனாறுமா ஓடப்போகிறது.? உதயநிதி ஸ்டாலின் ஏற்கனவே முதலமைச்சர் அதிகாரத்துடன் செயல்பட்டு வந்தார். தற்போது அதிகாரபூர்வமாக துணை முதலமைச்சர் என அறிவிக்கப்பட்டு உள்ளார். தமிழகத்தில் திமுக, அதிமுக என இரண்டே கட்சிகள் இருந்தன. தற்போது தமிழகத்தில் பல கட்சிகள் வந்துள்ளன, புதிதாக கட்சிகள் வந்ததால் சில வாக்குகள் சிதறியுள்ளன.

அதிமுகவின் 10 சதவீத வாக்குகள் குறையவில்லை, அதிமுக, திமுக தவிர பிற கட்சிகள் சிறிய கட்சிகள் தான், எங்களின் தோலில் ஏறி சவரி செய்யும் கட்சிகளாக தான் பார்க்கிறோம் என்றார்.

திருமாவளவன் இந்தியாவில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என கூறியுள்ளார். அதிமுக ஆட்சிக்காலத்தில் படிப்படியாக மதுக்கடைகள் மூடப்பட்டன, படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என நோக்கில் தான் அதிமுக உள்ளது" என கூறினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி