மஹாளய அமாவாசை ; முன்னோர்களுக்கு தர்ப்பணம்

66பார்த்தது
மஹாளயம் என்றால் கூட்டாக வருதல் என்று கூறப்படும் நிலையில், இந்த மஹாளய அமாவாசை தினத்தன்று ஒவ்வொரு குடும்பத்திலும் உயிரிழந்த முன்னோர்கள் கூட்டாக ஒரு சேர வருகை தந்து 15 நாட்கள் அவர்களது குடும்பத்தினருடன் இருப்பார்கள் என ஐதீகம் கூறிவரும் நிலையில், இந்த மகாளய அமாவாசை தினத்தில் தங்களது முன்னோர்களை நினைத்து திதி கொடுத்தால் வருடம் முழுவதும் உள்ள அமாவாசை தினத்திற்கு திதி கொடுக்காத பித்ரு தோஷங்கள் அனைத்தும் நீங்கும் என ஐதீகம் கூறுகிறது.


இதன் காரணமாக, மற்ற அமாவாசை தினங்களை விட புரட்டாசி மாதத்தில் வரும் மஹாளய அமாவாசை தினம் சிறப்பு மிக்கது என்பதால் இந்த தினத்தில் தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான வைகை ஆற்றின் தரை பாலத்தில குவிந்து வருகின்றனர்.

குறிப்பாக, காலை முதலே ஏராளமானோர் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக வைகை ஆற்றின் தரை பாலம் மற்றும் பேச்சியம்மன் படித்துறை ஆகிய பகுதிகளில் தங்களது முன்னோர்களுக்கு எள்ளும், எண்ணையும் படைத்து அதனை வைகை ஆற்றில் கரைத்து தங்களது முன்னோர்களை வழிபட்டு தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி