பவன் கல்யாண் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்

78பார்த்தது
சிறுபான்மை சமூக மக்கள் குறித்தும் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் குறித்தும் சமூக பதட்டத்தை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் மீது மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் புகார் அளித்துள்ளார்.

சனாதனம் குறித்து உதயநிதி ஸ்டாலின் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பேசிய பேச்சுக் குறித்து அண்மையில் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் விமர்சனம் செய்திருந்தார். இதன் அடிப்படையில் பவன் கல்யாணம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வழக்கறிஞர் வாஞ்சிநாதன் தலைமையிலான குழுவினர் மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று (அக்.,4) புகார் அளித்தனர்.

பிறகு செய்தியாளர்களை சந்தித்த வழக்கறிஞர் வாஞ்சிநாதன், 'திருப்பதியில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் நடிகர் பவன் கல்யாண் பேசிய பேச்சு எங்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இஸ்லாமியர்கள், கிறித்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மை மக்களை குறி வைத்து வெறுப்பை விதைக்கும் வண்ணம் நேரடியாகப் பேசியுள்ளார். அந்தப் பேச்சு வெளியாகியுள்ள பத்திரிகைகளை செய்திகளை வைத்து, பவன் கல்யாண் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி மதுரை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளோம் என்றார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி