மதுரை: காவலரின் தனி நபர் பிரச்சினையை வலைதளத்தில் பதிவேற்றம்

70பார்த்தது
மதுரை மாநகர் தல்லாகுளம் பகுதியில் பெண் காவலர் ஒருவர் சாலையோரம் நின்று கொண்டிருந்த நிலையில் பைக்கில் அங்கு வந்த நபர் ஒருவர் திடீரென சாலையில் பொது இடத்தில் வைத்து பெண் காவலரை சரமாரியாக தாக்கியதாகவும், இதனை கண்ட இளைஞர் ஒருவர் அதனை தட்டி கேட்கும் போது நானும் STAFF தான் என போலிஸ் என்று கூறுவது போல பேசி அதனை வீடியோவாக பதிவு செய்துள்ளார். இதனையடுத்து நான் 100க்கு போன் செய்து புகார் அளிப்பேன் வீடியோ பதிவு செய்த நபர் கூறுவதும் நீ எங்குவேண்டுமானாலும் சொல்லிக்கொள் என கூறியபடி அந்த நபர் பெண்காவலரை தனது பைக்கில் அழைத்துசெல்கிறார்.

அப்போது இவரைப்போன்ற கணவனோடு வாழ்வதற்கு சும்மாவே இருந்துவிடலாம் என கூறும் அந்த இளைஞர் இந்த வீடியோவை தனது முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

பெண்காவலருடன் வாக்குவாதம் செய்த நபர் அவருடைய கணவராக இருக்கலாம் என தெரியவரும் நிலையில் இதுபோன்ற வீடியோவை பதிவுசெய்து காவல்துறையினரிடம் புகார் அளிக்காமல் தனது முகநூல் பக்கத்தில் வீடியோவை வெளியிட்டுள்ளதால் பெண் காவலர் மன உளைச்சலுக்கு ஆளாகும் நிலை உருவாகும் என பல்வேறு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.


வீடியோவை பதிவுசெய்த இளைஞர் தானும் STAFF என கூறியதால் அந்த இளைஞரும் காவல்துறையை சார்ந்த நபரா? அல்லது காவல்துறையினரை மிரட்டுவதற்காக கூறினாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி