மதுரை: சென்னை - தூத்துக்குடி இடையே நவராத்திரி சிறப்பு ரயில்

59பார்த்தது
மதுரை: சென்னை - தூத்துக்குடி இடையே நவராத்திரி சிறப்பு ரயில்
நவராத்திரி விடுமுறை கால கூட்ட நெரிசலை சமாளிக்க சென்னை - தூத்துக்குடி இடையே சிறப்பு ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - தூத்துக்குடி சிறப்பு ரயில் (06186) அக்டோபர் 8 அன்று சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 11. 35 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 01. 50 மணிக்கு தூத்துக்குடி சென்று சேரும்.

மறு மார்க்கத்தில் தூத்துக்குடி - டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் (06187) தூத்துக்குடியில் இருந்து அக்டோபர் 10 அன்று மாலை 04. 15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 08. 55 மணிக்கு சென்னை சென்ட்ரல் சென்று சேரும்.

இந்த ரயில்கள் சென்னை எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, தேவகோட்டை ரோடு, சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். ‌ இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி