நெல்பயிர் எல்லாம் பாதியிலேயே கருகிவிட்டது - விவசாயிகள் வேதனை

68பார்த்தது
மதுரை மாவட்டம் அமைச்சர் மூர்த்தியின் சொந்த தொகுதியான கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் பெரியார் நேரடி் பாசனத்தின் கீழ் நெல் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.

தண்ணீர் திறக்கப்பட்டு கடந்த 50 நாட்களுக்கு மேலாக நெற்பயிர்கள் பயிரிடப்பட்டு விவசாயம் செய்யப்பட்டு வந்த நிலையில் பெரியார் பாசன தண்ணீர் திறப்பு தாமதம் காரணமாக 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் திடீரென அனைத்தும் காய்ந்து கருகி வருகிறது.

மேலும் நெற்பயிர்களுக்கு நடுவே புதிய வகை களைகள் முளைத்துள்ளது. இதனால் களையை வெளியில் அகற்ற முடியாத நிலை உருவாகியுள்ளது.

இதற்காக உரமும் இடப்பட்டதோடு, மருந்துகளும் தெளிக்கப்பட்ட நிலையிலும் களைகள் அழியவில்லை.

இது போன்று திடீரென நெற்பயிர்கள் காய்ந்து கருகுவதால் விவசாயிகள் ஏக்கர் ஒன்றுக்கு 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரைக்கும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக விவசாயிகள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

இது போன்று பத்து நாட்களாக நெற்பயிர்கள் காரணம் இல்லாமல் காய்ந்து விடுவதாகவும் புதிய வகை களைகள் முளைத்து நெற்பயிர்களை சேதப்படுத்துவதாகவும் வேளாண் துறை அதிகாரிகளுக்கு பலமுறை கூறியும் இதுவரையும் எந்த அதிகாரிகளும் பார்வையிடவில்லை. இதனால் நெற்பயிர்கள் அறுவடை செய்ய இயலாத நிலைக்கு விவசாயிகள் சென்றுள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி