மதுரையில் பலத்த சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருவதால் மதுரையின் முக்கிய நகர் பகுதிகளில் வாகனங்களை இயக்க முடியாமல் வாகன ஓட்டிகள் அட்சத்துடன் செல்கின்றனர். நேற்று முதல் வரும் 9ஆம் தேதிவரை 20 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
இந்த நிலையில் மதுரை மாநகர் பகுதிகளான அண்ணா நகர், கோரிப்பாளையம், தல்லாகுளம், தமுக்கம், தெப்பக்குளம், முனிச்சாலை, அனுப்பானடி, பெரியார், காளவாசல், மாட்டுதாவனி உள்ளிட்ட பகுதிகளில் திடீரென்று இடியுடன் கூடிய கனமழை பெய்து வருவதால் மதுரை மாநகர் பகுதி முழுவதும் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது.
இந்நிலையில் மதுரை சந்தப்பேட்டை டோங்கிக்குப்பம் பகுதியில் சூறைக்காற்றுடன் பெய்த மழையால் பழமை வாய்ந்த வேப்ப மரங்கள் தூரோடு சாய்ந்தன , பெரிய வேப்ப மரம் மின் கம்பத்தில் விழுந்ததில் மின்கம்பம் சாய்ந்து விழுந்தது.
மேலும் பழமை வாய்ந்த வேப்ப மரங்கள் புளிய மரங்கள் அந்தப் பகுதியில் இருந்த வீடுகளில் விழுந்த நிலையில் பத்திற்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்துள்ளன,
இந்நிலையில் முனிச்சாலை பகுதியில் பழமையான மரம் ஒன்று சூறாவளி காற்றுடன் கூடிய கனமழையின் போது வேறுடன் சாய்ந்து விழக்கூடிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.