கொலை மிரட்டல்; துணை மேயர் மீது வழக்கு

70பார்த்தது
மதுரை மாநகர் ஜெய்ஹிந்த்புரம் பகுதியைச் சேர்ந்த வசந்தா. இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பாக ஜெய்ஹிந்த்புரம் பகுதியைச் சேர்ந்த குமார் (எ) கோழிக்குமார் என்பவரிடம் வசந்தா தனது வீட்டை அடமானமாக வைத்து 10 லட்சம் ரூபாய் வட்டிக்கு கடன் வாங்கியுள்ளார்.

இந்நிலையில் கடனை முழுமையாக செலுத்தி விடுகிறேன் என வசந்தா கூறியதற்கு 15 லட்சம் ரூபாய் தருகிறேன் வீட்டை முழுவதுமாக கிரயம் செய்து கொடுக்க வேண்டும் என கேட்டுள்ளார். இதனையடுத்து தனது வீட்டை எழுதிகேட்டு தன்னை தாக்கி மிரட்டியதாக கூறி ஜெய்ஹிந்த்புரம் குமார் (எ) கோழிக்குமார் மற்றும் கணேசன் (எ) வாய் கணேசன், முத்து (எ)) புரோக்கர் முத்து ஆகிய 3 பேர் மீதும் ஜெய்ஹிந்த்புரம் காவல்நிலையத்தில் வசந்தா புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில் கடந்த ஜூலை 30ஆம் தேதியன்று துணை மேயர் நாகராஜன் மற்றும் அவரது சகோதரர் ராஜேந்திரன் மற்றும் புரோக்கர் முத்து ஆகியோர் நேரில் வந்து கோழிகுமாருக்கு ஆதரவாக பேசி வீட்டை கேட்டும், முந்தைய வழக்கில் சாட்சி சொல்ல கூடாது என கூறியும் தங்களை தாக்கி ஆபாசமாக பேசி மிரட்டல் விடுத்ததாக கூறி சிசிடிவி ஆதாரங்களுடன் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

இதனையடுத்து மூதாட்டியை தாக்கிய புகாரில் துணை மேயர் மற்றும் அவரது சகோதரர் உள்ளிட்ட 5பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் ஜெய்ஹிந்த்புரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி