வைகையாறு தூய்மைபணி ; பணம் கேட்டு மிரட்டியதாக ஆதினம் பேட்டி.

72பார்த்தது
மதுரை வைகையாற்றை சுத்தப்படுத்துவதற்கு பணம் வேண்டும் என கூறி வழக்கறிஞர்கள் எனக் குறிப்பிட்டு மதுரை ஆதீனம் மடத்திற்கு சிலர் வந்ததாகவும் அப்போது பணம் தர முடியாது இதனை அரசாங்கமே வேலை செய்ய முடியாது நீங்கள் எப்படி செய்யப் போகிறீர்கள் என கேள்வி எழுப்பியதால் அவர்கள் தன்றை அவதூறாக பேசிவிட்டு மிரட்டி அவதூறாக பேசியதாக மதுரை ஆதினம் குற்றம் சாட்டினார்.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய மதுரை ஆதினம்



வைகை ஆற்றை சுத்தம் செய்ய நாள் ஒன்று 15 ஆயிரம் பணம் கேட்டு வழக்கறிஞர்கள் 3 பேர் வந்தார்கள். 20 நாள் சுத்தம் செய்யணும், அந்த பணத்தை நீங்கள் தரவேண்டும் என்று கேட்டதற்கு முடியாது என்றேன்.

அரசாங்கம் இருக்கு மாவட்ட ஆட்சியர் இருக்கிறார் அனைவரும் சேர்ந்து தான் சுத்தம் செய்ய வேண்டும் தனிமரம் தோப்பாகாது உங்களால் செய்ய முடியாது. இதற்கு முன் இருந்த ஆதினம் எங்களுக்கு கொடுத்தார் என்று கூறினார்கள்.

உங்களுக்கு கொடுக்க முடியாது என்றேன் உடனடியாக அவர்கள் என்னை தாறுமாறாக அவதூறாக பேசி ஆதினமாக இருப்பதற்கு எனக்கு தகுதி இல்லை என கூறினார்கள்.

காவல் நிலையத்திற்கு எல்லாம் புகார் கொடுக்க நான் போக மாட்டேன் புகார் அளிக்கமாட்டேன். அடிக்கடி என்னை மிரட்டினால் அவர்களை நானே பார்த்துக் கொள்வேன் என்றார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி