மதுரை: சென்னை - நாகர்கோவில் இடையே நவராத்திரி சிறப்பு ரயில்
நவராத்திரி விடுமுறை கால கூட்ட நெரிசலை சமாளிக்க டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - நாகர்கோவில் இடையே ஒரு குளிர்சாதன சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - நாகர்கோவில் சிறப்பு ரயில் (06178) சென்னையிலிருந்து அக்டோபர் 9 அன்று இரவு 07. 00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10. 50 மணிக்கு நாகர்கோவில் வந்து சேரும். மறு மார்க்கத்தில் நாகர்கோவில் - டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் (06179) நாகர்கோவிலில் இருந்து அக்டோபர் 10 அன்று இரவு 07. 30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11. 25 மணிக்கு சென்னை சென்ட்ரல் சென்று சேரும். இந்த ரயில்கள் அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களில் 15 குறைந்த கட்டண குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், இரண்டு சரக்குப்பெட்டியுடன் கூடிய ரயில் மேலாளர் பெட்டி ஆகியவை இணைக்கப்படும். இந்த ரயில்களுக்கான பயண சீட்டு முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.