பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்!

56பார்த்தது
மதுரையில் 4 பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்

மின்னஞ்சல் மூலமாக மதுரையில் உள்ள 4 முக்கிய பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது அடுத்து, போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். சோதனைக்கு பிறகு தகவல் வெறும் தெரியவந்தது. இம்மிரட்டல் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகத்தின் துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் நேற்று பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு, நாளை விருதுநகரில் நடைபெற உள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று மாலை மதுரை வருகிறார்.

இந்நிலையில் மதுரை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இயங்கி வரும் 4 பள்ளிகளுக்கு மர்ம நபர்கள் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதனை அடுத்து மிரட்டல் விடப்பட்ட பள்ளிகளில் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை நடத்தினர். இந்த சோதனையில் அது போன்று வெடிகுண்டு பொருட்களோ அல்லது வேறு அபாயகரமான பொருட்களோ கண்டறியப்படவில்லை. வெடிகுண்டு மிரட்டல் வெறும் வதந்தி என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி