தமிழ்நாடு, நர்சரி பிரைமரி, மெட்ரிக், Cbse பள்ளிகள் சங்கம், தமிழ்நாடு இளம் மழலையர் பள்ளிகள் சங்கம், மதுரை இளம் மழலையர் பள்ளி சங்கங்கள் இணைந்து நேற்று ஆலோசனை பொதுகூட்டம் மதுரை மீனாட்சி பஜார் அருகே உள்ள லேபர் பள்ளியில் நடைப்பெற்றது.
மாநில பொதுச்செயலாளர் நந்தகுமார் தலைமையில் நடைப்பெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில்
இளம்மழலையர் பள்ளிகள் தனியார் பள்ளிகளின் இயக்கத்தில் இணைத்து அங்கீகாரம் பெறுவதில் நிறைய பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்கள்.
மழலையர் பள்ளிகளை சமூக நலத்துறை கீழ் கொண்டு வர வேண்டும் எனவும் அங்கீகாரம் இல்லாத பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும் என்றும் 10 ஆண்டுகளுக்கு மேல் செயல்படும் பள்ளிகளுக்கு தற்காலிக அங்கீகாரத்திலிருந்து நிரந்தர அங்கீகாரம் வழங்க வேண்டும் என்ற அரசாணை உள்ளது.
அவற்றை அமல் படுத்த வேண்டும் என்றும்,
தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு கட்டிட அனுமதிகளை வாங்குவதில் பிரச்சனைகளை சரி செய்ய வேண்டும், கல்வி GST வரியை தள்ளுபடி செய்ய வேண்டும்.
பெண்களால் நடத்தப்படும் மழலையர் பள்ளிகள் அதிகபட்சம் 60 குழந்தைகளை வைத்து நடத்தப்பட்டு வருகிறார்கள். அவர்களிடம் நிறைய ஆவணங்களை கேட்பதால் நிறைய இன்னல்களை சந்தித்து வருகின்றனர். அவற்றினை வரைமுறைகளை எளிமைப்படுத்தி அரசு அங்கீகாரம் பெறுவதற்கு முறை படுத்த ஆவண செய்ய அரசு முன் வர வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.