மனோ தங்கராஜ் விவகாரம்.. வழக்கறிஞர் வாஞ்சிநாதன் பேட்டி

77பார்த்தது
தமிழக அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டு அமைச்சர் மனோதங்கராஜின் பதவி பறிக்கப்பட்ட நிலையில் இது தொடர்பாக மதுரை கே. கே. நகர் பகுதியில் உள்ள மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் அலுவலகத்தில் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். மனோ தங்கராஜை அமைச்சரவை பதவியில் இருந்து நீக்கப்பட்டது முற்போக்காளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கேள்வியை எழுப்பியுள்ளது. இதற்கு திமுக தலைமை பதிலளிக்க வேண்டும். ஆர்எஸ்எஸ்-ஐ எதிர்த்தது தவறா? அவர் தகவல் தொழில்நுட்ப அமைச்சராக இருந்தபோது மென்பொருள் ஏற்றுமதியை 21 சதவீதத்திற்கு மேலாக உயர்த்தியவர் 10 லட்சம் பேருக்கு வேலை கிடைக்க வழி வகை செய்தார். ஆவினில் ஊழலை ஒழித்தார் அது தவறா? நாடாளுமன்றத் தேர்தலிலும் இடைத்தேர்தலிலும் வெற்றி பெற வைத்தவர். திமுகவில் கொள்கை ரீதியாக செயற்பாட்டாளர் போன்று செயல்பட்டு வந்தவரை திடீரென அமைச்சரவையில் இருந்து நீக்கி இருக்கிறீர்கள். தினசரி நிபந்தனை ஜாமினில் உள்ள ஒருவரை அவசர அவசரமாக அமைச்சராக அறிவிக்கிறீர்கள். ஆனால், கொள்கையாளர்களை ஆர்எஸ்எஸ், பிஜேபி எதிர்ப்பவரை சிறுபான்மையினரின் பிரதிநிதியாக இருப்பவரை நீக்குகிறீர்கள். தலைமை தன்னிச்சையாக முடிவெடுத்தது போல தான் தெரிகிறது அதனால் மூத்த அமைச்சர்கள் கேள்வி எழுப்ப வேண்டும். உட்கட்சி ஜனநாயகம் இருந்தால் தான் காப்பாற்றப்பட முடியும். அதனை அமைச்சர்கள் செய்ய வேண்டும் என்றார்.

தொடர்புடைய செய்தி