ICC சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று முதல் நடக்கவுள்ளது. இந்நிலையில் இன்று (பிப்.19) நடக்கும் முதல் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாடும் பாகிஸ்தான் அணி டாஸ் வென்ற நிலையில், பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. முதல் நாளான இன்று கராச்சி தேசிய ஸ்டேடியத்தில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் முகமது ரிஸ்வான் தலைமையிலான பாகிஸ்தான் அணி, மிட்செல் சான்ட்னெர் தலைமையிலான நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.