சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள ஆழிமதுரை கிராமத்தைச் சேர்ந்த சோபிகா (8), கிஷ்மிகா (4) ஆகிய இருவரும் பள்ளி அருகே உள்ள கண்மாயில் மூழ்கி உயிரிழந்தனர். இந்த நிலையில், உயிரிழந்த சிறுமிகளின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆறுதல் கூறிய நிலையில், தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார். முன்னதாக, இருவரது உடலை பள்ளி முன் வைத்து பெற்றோர், உறவினர்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.