அமெரிக்காவின் அதிபராக டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறையாகப் பதவியேற்ற பிறகு, அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் தங்கள் சொந்த நாடுகளுக்கு நாடு கடத்தப்படுகிறார்கள். அந்த வகையுள், அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களை நாடு கடத்தும்போது கைது, கால்களில் சங்கலியால் விலங்கிடப்பட்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு நெட்டிசன்கள் கடும் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.