பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கான காப்பீட்டு தொகை, இம்மாத இறுதிக்குள் வரவு வைக்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது, “புயலால் பாதிக்கப்பட்ட 5.18 லட்சம் விவசாயிகளுக்கு, ரூ.498 கோடி நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கணக்கெடுப்பு பணி முடிந்தவுடன் இம்மாத இறுதிக்குள் வரவு வைக்கப்படும். சமூக வலைத்தளங்களில் அரசியல் செய்பவர்கள் கூறுவதை யாரும் நம்ப வேண்டாம்” என்றார்.