மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 2026ஆம் ஆண்டு முதல் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை தேர்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த மாற்றம் மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைத்து, அவர்களின் மதிப்பெண்களை மேம்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. 2026 ஆம் ஆண்டு முதல் இந்த திட்டத்தைக் கொண்டு வருமாறு கல்வி அமைச்சகம் CBSE-யிடம் கேட்டுக்கொண்டுள்ளது.