அதிமுக தேர்தல் பொறுப்பாளர்கள் பட்டியலில், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பெயர் விடுபட்டது குறித்து, முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அவர் கூறியதாவது, “மாவட்ட செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்களுக்கு தேர்தல் பொறுப்பாளர் பட்டியலில் இடமில்லை. அவர்களைத் தவிர்த்து மற்றவர்களுக்கு தான் பொறுப்பு உள்ளது. நானும் மாவட்ட செயலாளராக இருக்கிறேன், எனக்கும் பொறுப்பு இல்லை. சப்ஜெட்டே தெரியாமல் செய்திகள் போடப்பட்டு வருகிறது” என்றார்.