கேரளா மாநிலம் மூணாறு அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்ததில் 2 மாணவிகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எக்கோ பாய்ண்ட் என்ற இடத்தில் வளைவில் திரும்பியபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த விபத்தில் காயமடைந்த பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாகர்கோவிலில் இருந்து மூணாறுக்கு 45 பேர் சுற்றுலாவுக்கு வந்தபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.