மகா கும்பமேளாவில் புனித நீராடிய நடிகர் ரிச்சர்ட் ரிஷியின் வீடியோ வெளியாகியுள்ளது. நடிகை ஷாலினி அஜித்தின் தம்பி ரிச்சர்ட் ரிஷி உத்தர பிரதேசத்தில் நடைபெற்று வரும் கும்பமேளாவில் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய காணொளியை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.சினிமா, அரசியல் மற்றும் அரசு அதிகாரிகள் என கும்பமேளாவில் புனித நீராடி வருகின்றனர். இதுவரை மகா கும்பமேளாவில் 55 கோடி மக்கள் புனித நீராடியுள்ளனர்.