தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட பதிவில், “2025-2026 நிதிநிலை அறிக்கையில், வணிகவரி - சமூக நலன் - குழந்தைகள் நலன் - ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலன் - பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை - இந்து சமய அறநிலையத்துறை - சுற்றுச்சூழல் மற்றும் சுற்றுலா ஆகிய துறைகளின் கீழ் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்று, கருத்துகளைக் கேட்டறிந்தேன்" என குறிப்பிட்டுள்ளார்.